ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010
யாருக்கும் வெட்கமில்லை...
ஊரே கண்கொட்ட
விழித்தபடி... - அவள்
மெ(மி)ன்குடில் வாசலை
வெறித்தபடி..
வறுமைக்கென அவள் தன்னைச்
சிறுமைப்படுத்தியிருக்கக்கூடும்..
கணவன் கயவனாகிப்போனதால்
கண்ணியம் தப்பியிருக்கக்கூடும்...
பெற்றோருக்கென
பிள்ளைக் கடனடைக்கவென்றோ...
பெற்ற பிள்ளைக்கடனடைக்கவென்றோ
பாதை மாறியிருக்கக்கூடும்...
ஊரே கவலையுற்றது...
அந்தக் கறைபடிந்த வாழ்வை எண்ணி...
வெட்கமில்லாதவள்..
வேசியென்று
வெட்கத்தில் தூற்றியது...
ஆனால்
அனுதினமும் அக்குடிலின்
நாசி நுகரும் அந்த
வேசிப்பயல்களைப்பற்றி
யாருக்கும் கவலையில்லை...
அவர்தம்மை
ஆண்மக்களென்று பீற்றிக்கொள்ள
யாருக்கும் வெட்கமில்லை...
* * *
* பஞ்சத்தில் பெண்வாட மஞ்சத்தில் தள்ளுவான்
நெஞ்சத்தில் வேசிப் பயல்...
* பஞ்சணையில் நொந்து பறிதவிககும் பெண்மயிலை
வஞ்சனையில் பேசும் உலகு...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)