புதன், 22 டிசம்பர், 2010

சண்டைக்கோழி

ஆயத்தமாகிவிட்டன அவை...
சுற்றியுள்ள சமூக அவலங்களைத்
திலகமிட்டபடி...

புத்தம்புது திட்டங்கள் - மாந்தர்
நித்தம் இனிது வாழ
தத்தம் கழுத்தில் கட்டிய
கங்கணத்துடன்
களமிறங்கத்தொடங்கின..

ஊழலைக் கருவருக்க
காலில் கட்டப்பட்ட
கத்தியுடன் மோதின...

பலகோடிப் பார்வையாளர்கள்
கையில் வாக்குச்சீட்டுடன்
வாய்க்கு வாய்க்கரிசி வேண்டி..

வென்றது ஒன்று..
தோற்றது கறிசமைக்கப்பட்டது...
வென்றது தன்னை மகிழ்வோடு
கொண்டாடிக்கொண்டது...
ஊழலறுக்க வேண்டிய கத்தி
ஊழல்கத்தியானது...

வெற்றி தம்பட்டமடிக்கப்பட்டது
ஊரெங்கும் சுவரொட்டிகள்
கழுதைக்கு உணவாகின...

ஆனால்
நெற்றியில் அழிக்கப்பட்ட
திலகத்தையும், கழுத்தில்
கழற்றி எறியப்பட்ட
கங்கணத்தையும் யாரும்
கண்டுகொள்ளவில்லை...

நீதி :

கூத்துப் பார்க்கும்
கூட்டமிருக்கும்வரை
குரங்குகளுக்கு கொண்டாட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக