பிசாசென மண்பயனைப் பிய்த்துக் கிழித்த
ரசாயனத்தால் காயம்பட்டுக் கற்பிழந்த பூமி...
விசாரிப்பே யின்றிக் கொலைசெய்த மாக்கள்
பிசாசிடம் மண்டியிட் டனர்...
ரசாயனத்தால் காயம்பட்டுக் கற்பிழந்த பூமி...
விசாரிப்பே யின்றிக் கொலைசெய்த மாக்கள்
பிசாசிடம் மண்டியிட் டனர்...
அவயங் களொழிந்து பாலையாம் மண்ணும்
சவங்கள் பெருகி வறுமையும் வாட்டும்
புவன மழிந்தபடிப் பிச்சை யெடுக்கும்
விவசா யமிழந்த நாடு..
சாயம் வெளுத்தபின் தானுணர்ந் தென்னபயன்
காயம் பெருகிப்பின் மண்ணுயிர் மாய்ந்ததிங்கே
மாயம் போனதொழில் மீண்டிடுமா நம்மிடையே
சாயம் போன உழவு..
காயம் பெருகிப்பின் மண்ணுயிர் மாய்ந்ததிங்கே
மாயம் போனதொழில் மீண்டிடுமா நம்மிடையே
சாயம் போன உழவு..
அளவிலா வாழ்நாள் அழிந்துக் கருகும்
பிளவுபட்ட மண்பாலை யானது - காய்ந்து
களம்தேடி செத்தொழிந்து மாயும் வயிறும்
உழவற்றுப் பொய்த்த நிலம்..
பழுந்தொழில் வாழ்வில் முதியோர் சொல்லி
விழுந்திடல் நன்றே யிளையரிட மென்றும்
உழுந்தொழி ழொன்றே வுயர்தொழில்மற் றெல்லாம்
பழுதாக்கும் இவ்வுலகைக் கொன்று
உழவே உயிரென்று ஊன்றிடுவோம் விதையை
நிலமங்கை தான்மிளிர ஒன்றிடுவோம் மண்ணில்
இழவொழித்து மீட்சிபெற இன்றே தொடங்கி
பலமுறையில் விதைப்போம் பயிர்
நிலமங்கை தான்மிளிர ஒன்றிடுவோம் மண்ணில்
இழவொழித்து மீட்சிபெற இன்றே தொடங்கி
பலமுறையில் விதைப்போம் பயிர்
ஒன்றிணைந் தோங்கி யுரைப்போம் உலகத்தை
வென்று வாழ விவசாயமே வழியென்றும்...
இன்றிந்த நாட்டிற்கு மண்நலம் ஈயுமே
என்றும் மனிதநல மென்று
இன்றிந்த நாட்டிற்கு மண்நலம் ஈயுமே
என்றும் மனிதநல மென்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக