புதன், 8 செப்டம்பர், 2010

மனிதம்...

சாலையெங்கும்

சிதறியபடி பல
மனிதப்புழுக்கள்...

ஆங்காங்கே
சிதறிக்கிடந்த
ரத்தக் கிறுக்கல்களுக்கு
மத்தியில் மெல்லிய
ஓலத்துடன் ஒரு உயிர்
அஸ்தமித்துக்கொண்டிருந்தது...

பற்பல கடமைகள்
நினைவினில் கோலம்போட...
கண்களில் லேசான கண்ணீர்
சில எதிர்ப்பார்ப்புகளோடு...
காப்பாற்றப்படுவோம் என்ற
நம்பிக்கையோடு...
ஊசலாடிக்கொண்டிருந்தது
அந்த உயிர்...

இன்றோ நாளையோ
ஊசலாடப்போகும்
ஏனைய உயிர்கள்
வேடிக்கை பார்த்தன...

பரிதாபத்தோடு பல...
பறிதவிப்பில் சில...
ரத்தம் கண்டதில்
சித்தம் தொலைந்தபடி
சில பூச்சிகளென..
நிரம்பி வழிந்தது சாலை...

ஆனால் அந்த
உயிரைக் காக்க
ஒருவரும் தயாராயில்லை...

நிமிடங்கள் கடந்தன...
இப்போது
மரணமடைந்திருந்தது
மனிதம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக